துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையை நோக்கி செபம்
கன்னிமரியே / அழகு அன்புத்தாயே / மன்றாடும் குழந்தையை / ஒருபோதும் புறக்கணியாத அன்னையே /
உமது திருஇதயத்திலிருந்து / பெருக்கெடுத்து வழியும் / அன்பினாலும் முடிவில்லாத இரக்கத்தினாலும் / குழந்தைகள் எமக்காக /
அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவுருவே / உமது கருணைப்பார்வையை / எம்மீது திருப்பி /
எனது வாழ்வில் திணற வைக்கும் / முடிச்சுகளை கண்ணோக்கியருளும் / எனது துன்ப வலிகளை /
செயலிழக்கச் செய்யும் / துன்ப முடிச்சுகள் அனைத்தையும் / நீர் அறிவீர் / எங்கள் வாழ்க்கை நூலில் /
விழும் முடிச்சுகளை அவிழ்க்க / கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே / உமது திருக்கரங்களில் /
என் வாழ்வை ஒப்படைக்கிறேன் / உமது இரக்கப்பெருக்கை /ஒரு போதும் /ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் /
உம்மால் அவிழ்க்க முடியாத/முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் / நம்புகிறேன் /
வல்லமையின் தாயே / ஆண்டவர் இயேசுவிடம் பரிந்துபேசும் /உமது பலத்தினால்/
என்னை வாட்டி வதைக்கும் இந்த சிக்கலான முடிச்சுகளை/
(அமைதியாக ஒரு நிமிடம் துன்ப முடிச்சுகளை மனக் கண்முன் கொண்டு வரவும்)
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக்கொள்ளும் / தந்தையாம் கடவுளின் /
உன்னத மகிமை வெளிப்படும்படி / எனது துன்ப முடிச்சுகளை /
இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும் எனக்கு ஆறுதல் வழங்க /
கடவுளால் அருளப்பட்டவர் நீர் / எனது பலவீனத்தில்/என் வலிமை நீரே /
உம் திருமகன் இயேசுவிடமிருந்து / என்னைப் பிரிக்கும் சக்திகளை /
அழிப்பவரும் நீரே / அம்மா எனக்குப் பதில் தாரும் / பாதுகாத்தருளும் /
வழிநடத்தும் / காப்பாற்றும்/ஏனெனில் /நீயே என் உறுதியான அடைக்கலம் /
உம் மீது என் நம்பிக்கையை வைக்கிறேன். ஆமென்.
Prayer to Mary, Undoer of Knots
Virgin Mary, Mother of fair love, Mother who never refuses to
come to the aid of a child in need, Mother whose hands never cease to
serve your beloved children because they are moved by the
divine love and immense mercy that exists in your
heart, cast your compassionate eyes upon me and see the
snarl of knots that exist in my life. You know very well
how desperate I am, my pain, and how I am bound by these knots.
Mary, Mother to whom God entrusted the undoing of the
knots in the lives of his children, I entrust into
your hands the ribbon of my life. No one, not even the
Evil One himself, can take it away from your precious care.
In your hands there is no knot that cannot be undone.
Powerful Mother, by your grace and intercessory power with
Your Son and My Liberator, Jesus, take into your hands today this knot.
[Mention your request here]
I beg you to undo it for the glory of God, once for all.
You are my hope. O my Lady, you are the only consolation
God gives me, the fortification of my feeble strength,
the enrichment of my destitution, and, with Christ,
the freedom from my chains. Hear my plea. Keep me, guide me,
protect me, o safe refuge! Mary, Undoer of Knots, pray for me.